மரணம் என்பது மட்டும்தான் வாழ்க்கையின் ஒரே உண்மை.
கட்டாயம் நடக்கக்கூடிய ஒரு எதிர்பாராத சம்பவம். அந்த சம்பவம் எதிர்பாராமல் நடக்கிறதுனால தான், அதனால வரக்கூடிய சோகமும் துக்கமும்.
எதிர்பார்த்து வரக்கூடிய மரணத்தின் மீது எந்த ஒரு வருத்தமோ துக்கமோ இருப்பதில்லை.
வீட்டுல வயசானவங்க ஒருத்தவங்க இருக்கும்போது அவங்க மரணத்திற்காக போராடிட்டு இருக்கும்போது அல்லது மரணத்திற்கு கூட போராடிகிட்டு இருக்கும்போது, அவங்க குடும்பத்தால இந்த மரணம் வேண்டப்படுகிறது. அதே நேரத்தில வாழ வேண்டிய ஒருத்தர், அல்லது அந்த குடும்பத்த வாழ வைக்க வேண்டிய ஒருத்தரின் மரணம் பேரிடி.
அப்போ மரணத்தால் வரக்கூடிய துக்கம், சோகம், வருத்தம், பேரிழப்பு எல்லாம் அந்த எதிர்பாராத நேரத்தில் நிகழும் போது மட்டுந்தான். கூட, மரணத்திவரின் தேவை அந்த குடும்பத்திற்கு எத்தனை தூரம் முக்கியம் என்பதை வைத்தும் தான் தீர்மானிக்கப்படுகிறது.
மரணம் என்பது மட்டுத்தான் உண்மை, அதனால் ஏற்படக்கூடிய துக்கம், சோகம், வருத்தம், பேரிழப்பு போன்றவை பொய்யானவை.
People used to call it as uncertain event.
I differ from that.
It is an certain event but it will happen uncertainly.